நடந்தது கனவா ?

வரம் வாங்கி வந்தவன் தான்
பிள்ளை தானே, அழுதுப் பிறந்தேன்
அன்னை மடியில்.. தந்தை சிரிப்பில்
உறவுக்கெல்லாம் கொண்டாட்டம்
தங்கள் கூட்டில் புதிய கிளி
பாட்டு படிக்கும்..தாளம் தட்டும்
தாய் தந்தைக்குப் பெருமிதம்
வேகமாய் வளர்ந்தேனாம், ஒடித் திரிந்தேனாம்
பாடம் படித்து..மட்டைப் பிடித்து
நண்பர்கள் அழைத்தனர்
சுற்றித் திரிந்தோம்..பழகிக் கலித்தோம்
விசில் அடித்து..தோல் சாய்ந்து
அவள் அழகு தான்
மிக ரசித்தேன் எனை மறந்தேன்
பின் தொடர்ந்து..பின் தொலைத்து
இன்று முழித்துக்கொண்டேன்
தூங்கி முடித்தேன் நல்ல கனவு
முன்னே உறவுகள்.. சற்று வயது தளர்ந்து !!
P.S: என்னை போன்ற கோடிக்கணக்கான நண்பர்களுக்காக ...
0 Comments:
Post a Comment
<< Home