Thursday, April 16, 2009

கர்வம்


கற்றது கை மண் அளவு
கல்லாதது உலகளவு

- சொன்னது
கண்டதைக் கற்றுக்கொள்ள அல்ல
மண்டைக்குள் கர்வம் கொள்ளாமல் செல்ல !!

மோகம்


நிஜம் அறிந்த கண்கள்
நிழல் தேடும் பார்வை

குறை இல்லா இதழ்கள்
கறைபட்ட கண்ணம்...

Thursday, July 24, 2008

அன்றும் இன்றும் !!








அன்று....

சுமை இல்லா பறவை
திசை இல்லா காற்று
வாழ்க்கை வாழத்தான் ...

இன்று....
சுமைதாங்கும் கழுதை
திசை அறிந்த ஓடை
வாழ்க்கை தேடத்தான் ...

Monday, December 10, 2007

அன்புள்ள விஜி!!!










கையில் ஒளி; கழுத்தில் மின்னல்
கணவனே பூஜை; சிரிப்பே அர்ச்சணை !!!

Wednesday, November 28, 2007

பெரியவர் சிறியவர்







பெரிய சாக்கடை
சொல்லோ கடும்சகதி

சின்ன புக்கடை
சொல்லோ தேன்மழை !!!

Saturday, November 24, 2007

ஓ.. மனமே!!!











கேள்வி கேட்கிறாய்
விடையைத் தேடினாய்

கேள்வி மறக்கிறாய்
விலகிக் களிக்கிராய்

கண்டுப் பிடிக்கிறாய்
விடைக்கு கேல்வியை !!!!
-------------------------------
நிற்க மறுக்கிறாய்
அலை பாய்கிறாய்

வர மறுக்கிறாய்
வந்து போகிறாய்

நீ என்னோடு
வந்தால் என்ன?

Friday, November 09, 2007

ஒரு சலனம்!!!








என் கூட்டை எட்டிப் பார்த்தது ஒரு சிட்டுக்குருவி
நான் கட்டவிழ்த்து விரித்தேன் என் காதல் சிறகை...

Friday, August 31, 2007

இரயில் பயணங்கள்










சிலையாய் வடித்த அழகு தேவதைகள்
அழகை ஆராதிக்கும் குடிகார குமரர்கள்

எனக்கு துணையாய் இரண்டு மூன்று மலைத்தொடர்கள்
முகிலோடு அவை பாடும் காதல் பாடல்கள் !!!